/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இ சேவை மையத்திலும் விவசாயிகள் பதியலாம்
/
இ சேவை மையத்திலும் விவசாயிகள் பதியலாம்
ADDED : பிப் 25, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்ப்பு பணி அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடந்து வருகிறது.
வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விமலா கூறியதாவது:
விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்குவதற்காக அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகளின் நில தரவுகள் பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இ சேவை மையங்களிலும் விவசாயிகள் பதிவு செய்யலாம்.
வேளாண் அலுவலர்கள், மகளிர் திட்ட பயிற்றுநர்கள், இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் தேடி வரும்போது விவசாயிகள் ஆதார், நில உடைமை பட்டா, ரேஷன் கார்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்றார்.