/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல் போகத்திற்கு குறைந்தளவு தண்ணீர் திறப்பு விவசாயிகள் புகார்
/
முதல் போகத்திற்கு குறைந்தளவு தண்ணீர் திறப்பு விவசாயிகள் புகார்
முதல் போகத்திற்கு குறைந்தளவு தண்ணீர் திறப்பு விவசாயிகள் புகார்
முதல் போகத்திற்கு குறைந்தளவு தண்ணீர் திறப்பு விவசாயிகள் புகார்
ADDED : ஆக 28, 2024 04:00 AM
மதுரை : 'பேரணை முதல் கள்ளந்திரி வரையான முதல் போக சாகுபடிக்கு நீர்வளத்துறையினர் குறைந்தளவே தண்ணீர் திறந்து விடுவதாக' கள்ளந்திரி, குலமங்கலம் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
விவசாயிகள் திருப்பதி, ராஜா கூறியதாவது:
முதல் போகத்திற்கு தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் தரவேண்டும். ஏற்கனவே தாமதமாக ஜூலை 3 ல் தண்ணீரை திறந்து விட்டனர். 38 நாட்களை கடந்த நிலையில் மழையை காரணம் காட்டி வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பதை நீர்வளத்துறையினர் நிறுத்தி விட்டனர்.
45 நாட்கள் தொடர்ந்து தண்ணீர் திறந்ததாக கூறி அடுத்து முறைப்பாசனம் என்ற பெயரில் தண்ணீரை நிறுத்தியுள்ளனர். தற்போது நெற்பயிரில் களைக்கொல்லி தெளிக்கும் தருணம் என்பதால் நிலத்தில் கண்டிப்பாக ஈரப்பதம் இருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் விடாததால் குலமங்கலம், வடுகபட்டி, கள்ளந்திரி பகுதிகளில் நுாற்றுக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் காயத் துவங்கியுள்ளன. தண்ணீரை உடனடியாக திறந்தால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும்.
மேலும் தினமும் 900 கனஅடி தண்ணீருக்கு பதிலாக குறைந்தளவே திறக்கின்றனர். அதையும் சரியான அளவில் தரவேண்டும் என்றனர்.
இடையில் மழை பெய்ததால் நிறுத்தப்பட்ட நாட்களுக்கும் சேர்த்து 45 நாட்களுக்கு மேல் தொடர்ந்து தண்ணீர் விடப்பட்டுள்ளது. 900 கனஅடி என்ற அளவையும் குறைக்கவில்லை. அடுத்த முறைப்பாசனத்திற்கு ஆக.28 ல் (இன்று) தண்ணீர் திறக்கப்படும்.
அன்புச்செல்வன்
நீர்வளத்துறை
செயற்பொறியாளர்