/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மோட்டார் பம்பு திருட்டை தடுக்க கலெக்டரிடம் விவசாயிகள் மனு
/
மோட்டார் பம்பு திருட்டை தடுக்க கலெக்டரிடம் விவசாயிகள் மனு
மோட்டார் பம்பு திருட்டை தடுக்க கலெக்டரிடம் விவசாயிகள் மனு
மோட்டார் பம்பு திருட்டை தடுக்க கலெக்டரிடம் விவசாயிகள் மனு
ADDED : மே 08, 2024 05:06 AM
மதுரை : மேலுார் பகுதியில் மோட்டார் திருடும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அனுமதியின்றி தனியார் ஆலைகளுக்கு கரும்பு வெட்டி எடுத்துச் செல்வதை தடுக்கவும் வலியுறுத்தி, விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
மேலுார், கொட்டாம்பட்டி தாலுகாவில் விவசாயிகள், ஊராட்சி மன்ற குடிநீர், போர்வெல் கிணறுகளின் பம்புசெட்களில் பயன்படுத்தப்படும் காப்பர் ஒயர்கள் அடிக்கடி திருடு போயின.
முப்பது முதல் 50 மீட்டர் வரையான காப்பர் ஒயர்கள் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மதிப்பில் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பழனிசாமி கூறுகையில், ''மோட்டார்களில் காப்பர் ஒயர்களை திருடுவதால், அதனை மீண்டும் வாங்க விவசாயிகளுக்கு சக்தி இல்லை.
மோட்டார் இன்றி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதும் முடியாத காரியம். விவசாயிகளுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். போலீசஸ் நடவடிக்கை இல்லாததால் கலெக்டரிடம் புகார் அளித்தோம். நடவடிக்கை இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்'' என்றனர்.
அவர் அளித்த மற்றொரு மனுவில், ''மதுரை தேசிய கூட்டுறவு ஆலைப்பகுதியில் அனுமதியின்றி தனியார் சர்க்கரை ஆலையினர், கடந்தாண்டு கரும்பை வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். அதற்கு ஆலைஅதிகாரிகள் ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.195 கொடுத்துள்ளனர்.
இதனால் தேசிய சர்க்கரை ஆலைக்கு பாதிப்பு ஏற்படும். இதைத்தடுக்கவும், ஊக்கத்தொகை கிடைக்க சிபாரிசு செய்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

