ADDED : ஆக 28, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தாலுகா தலைவர் அடக்கிவீரணன் தலைமை வகித்தார்.
மாநில துணைத் தலைவர் பழனிச்சாமி, மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், கதிரேசன், தலைவர் வேல்பாண்டி, தாலுகா செயலாளர் ராஜேஸ்வரன், மா.கம்யூ., தாலுகா செயலாளர் கண்ணன், சி.ஐ.டி.யு., தாலுகா தலைவர் மணவாளன் உள்ளிட்டோர் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்ககோரி கோஷமிட்டனர்.