ADDED : ஜூன் 01, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், விவசாயிகளுக்கு கண்துடைப்பான வேளாண் கடன் தள்ளுபடி அறிவித்துள்ளது எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில அமைப்புச் செயலாளர் நேதாஜி, நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், காராமணி, இளைஞரணி ரஜேஸ்வரன், ஒன்றிய நிர்வாகிகள் மீரான்மைதீன், பழனியப்பன், சின்னச்சாமி, 58 கிராம கால்வாய் பாசன சங்க நிர்வாகிகள் காட்டுராஜா, ஜான்சன் பங்கேற்றனர். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வர் விஜய் விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தற்போது அறிவித்துள்ள தள்ளுபடியை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
