ADDED : ஜூன் 01, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: செல்லம்பட்டி நாட்டாமங்கலம் விவசாயிகளுக்கு மண்வள பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
குடுமியான்மலை மாநில வேளாண்மை மேலாண்மை விரிவாக்க பயிற்சி மைய கூடுதல் இயக்குநர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மதுரை வேளாண் இணை இயக்குநர் முருகேசன், உதவி இயக்குநர் செல்வராஜ், விதை பரிசோதனை அலுவலர் சிவகாமி பங்கேற்றனர். மண்வள அட்டை நோக்கம், மண்வள பாதுகாப்பு, பரிந்துரைத்த அங்கக, இயற்கை உர பயன்பாடு, பசுந்தாள், பசுந்தழை பயிர்கள், நுண்ணுாட்டச்சத்துக்கள், நானோ உரங்கள், திரவ உரம் பயன்பாடு, சான்று பெற்ற விதை பயன்படுத்துவது உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
