/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
விளைய வைப்பதும், விலையை வைப்பதும் விவசாயிகளாக தான் இருக்கணும்: பயிற்சி முகாமில் தகவல்

ADDED : செப் 11, 2024 06:18 AM
மதுரை : 'உணவுப்பொருட்களை விளைய வைப்பதும் அதற்கான விலையை நிர்ணயிப்பதும் விவசாயிகளாக இருக்க வேண்டும்' என மதுரையில் நடந்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் அட்மா திட்டம் சார்பில் பயிற்சி நடந்தது. இணை இயக்குநர் சுப்புராஜ் தலைமை வகித்தார். கால்நடை துறை இணை இயக்குநர் நந்தகோபால், துணை இயக்குநர் அமுதன் முன்னிலை வகித்தனர்.
வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி பேசியதாவது: வேளாண் விற்பனை மூலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு ஏலத்தின் மூலம் சரியான விலையை பெற்றுத் தருகிறோம். வேளாண் வணிகத்தின் மூலம் 100 விவசாயிகளை இணைத்து உழவர் குழுக்கள், ஆயிரம் விவசாயிகளை உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குகிறோம். இதன் மூலம் விளைபொருளுக்கு சரியான விலையை விவசாயிகளே நிர்ணயிக்க முடியும் என்றார்.
தோட்டக்கலை உதவி இயக்குநர் ஸ்ரீமீனா, மீன்வளத்துறை ஆய்வாளர் சோபியா, பட்டுவளர்ச்சி துறை இளநிலை ஆய்வாளர் சிக்கந்தர், விதைச்சான்று அலுவலர் கண்ணன் பேசினர். வேளாண் அலுவலர் முத்துலட்சுமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.