ADDED : ஜூன் 22, 2026 09:34 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், தமிழக முதல்வர் விஜய் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி விவசாயக்கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
மாநில அமைப்புச் செயலாளர் நேதாஜி, மதுரை மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன், காராமணி, ராஜேஷ், மார்க்சிஸ்ட் கட்சிகள் ராமர், மக்கள் அதிகாரம் சிவகாமு, வக்கீல் போஸ், ஒன்றிய நிர்வாகிகள் மீரான்மைதீன், முருகன், சின்னன் பங்கேற்றனர். விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். 58 கிராம கால்வாய்க்கு அரசாணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
