/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நீச்சல் பழகிய போது மாமன், மருமகன் பலி
/
நீச்சல் பழகிய போது மாமன், மருமகன் பலி
ADDED : ஏப் 02, 2024 10:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கருக்கட்டான்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்த், 38, மளிகைக் கடை ஊழியர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வெள்ளைத்தேவன்பட்டியில் வசிக்கும் இவரது சகோதரியின் மகன் பிரேம்குமார், 22, கல்லுாரி மூன்றாமாண்டு மாணவர்.
விடுமுறையில் ஊருக்கு வந்தவர் மாமா ஆனந்த்துடன் சீமானுாத்து பகுதியில் உள்ள கிணற்றில் நீச்சல் பழகச் சென்றார். கிணற்றில் இருவரும் எதிர்பாராத விதமாக மூழ்கி இறந்தனர். உசிலம்பட்டி போலீசார், தீயணைப்பு வீரர்கள் இருவரது உடலையும் மீட்டு விசாரிக்கின்றனர்.

