ADDED : மே 22, 2024 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி குறிஞ்சி நகர் மலைவாழ் மக்களுக்கு மருத்துவ முகாம், அன்னதானம் நடந்தது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் துவக்கி வைத்தார்.
அவர் கூறுகையில், ''மதுரை கருணாநிதி நுாலகத்திற்குள் மழைநீர் மீண்டும் புகுந்துள்ளது. மாட்டுத்தாவணி மார்க்கெட்டிலும் தொற்றுநோய் அபாயம் உள்ளது. நான் உருட்டல் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன். பன்னீர்செல்வத்தின் சுயநல எண்ணத்திலிருந்து அ.தி.மு.க.,வை மீட்டெடுக்க, உயிரையும் பணயம் வைப்பதற்கு தயாராக இருக்கிறோம்'' என்றார்.

