/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வெற்றிலையை பாதுகாக்க சேலையால் வேலி அமைப்பு
/
வெற்றிலையை பாதுகாக்க சேலையால் வேலி அமைப்பு
ADDED : ஜூலை 26, 2024 06:22 AM

சோழவந்தான் : சோழவந்தானில் காட்டுப் பன்றிகளை விரட்ட வெற்றிலை கொடிக்காலை சுற்றி விவசாயிகள் சேலைகளை கட்டி தடுப்பு வேலி அமைத்துள்ளனர்.
இங்குள்ள பள்ளபட்டி ரோட்டில் கால்வாய் மற்றும் கிணற்று பாசனத்தில் வாழை, தென்னை, வெற்றிலை பயிரிடப்படுகிறது. இரும்பாடி ரோட்டில் பன்னிமுட்டி முனியாண்டி கோயில் அருகே வைகை ஆற்றின் கரையோர முட்புதர்களுக்குள் காட்டுப் பன்றிகள் வசிக்கின்றன.
இவை இரவில் கூட்டமாக வந்து தென்னங்கன்றுகள், கொடிக்கால் என பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதை தடுக்கும் விதமாக வெற்றிலை கொடிக்காலை சுற்றி வழக்கமாக அமைக்கும் கம்பு வேலியில் சேலைகளை கட்டி தடுப்பு அமைக்கின்றனர்.
இருப்பினும் சில பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தியும் செல்கின்றன. வாடிப்பட்டி தாலுகாவில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பன்றிகளை விரட்ட வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.