/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புற்றுநோயிலிருந்து மீண்டபின் கருவுறுதல் சாத்தியமே: கருத்தரங்கில் தகவல்
/
புற்றுநோயிலிருந்து மீண்டபின் கருவுறுதல் சாத்தியமே: கருத்தரங்கில் தகவல்
புற்றுநோயிலிருந்து மீண்டபின் கருவுறுதல் சாத்தியமே: கருத்தரங்கில் தகவல்
புற்றுநோயிலிருந்து மீண்டபின் கருவுறுதல் சாத்தியமே: கருத்தரங்கில் தகவல்
ADDED : ஏப் 15, 2024 01:37 AM
மதுரை : 'இளம்வயதில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் கருவுறுதல் சாத்தியமே' என மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் பயன்பெறும் வகையில் கருவுறுதல் தொடர்பானஇக்கருத்தரங்கிற்கு இந்திய கருவுறுதல் பாதுகாப்பு அமைப்பு (எப்.பி.எஸ்.ஐ.), மதுரை மகப்பேறு மற்றும் பெண்கள் நல டாக்டர்கள் சங்கம் ஏற்பாடுகளை செய்தன.
எப்.பி.எஸ்.ஐ., தலைவர் மாதுரி பாட்டீல் பேசியதாவது: 1970களில் புற்றுநோயில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 49 சதவீதமாக இருந்த நிலை மாறி தற்போது 68 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகு கர்ப்பம் தரிப்பது சாத்தியம். இதுகுறித்தும், தாய்க்கும் வயிற்று சிசுவுக்கும் பாதுகாப்பானதாக இருக்கக்கூடும் என்பது பற்றியும் டாக்டர்கள், நோயாளிகளிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை என்றார்.
கருமுட்டை, விந்தணு உறைதல், கருமுட்டை உறைதல், கருப்பை மற்றும் டெஸ்டிகுலர் திசு உறைதல், கதிர்வீச்சிலிருந்து கருப்பையை அறுவை சிகிச்சை மூலம் நகர்த்தி கருவுறுதலை பாதுகாக்கும் சிகிச்சை குறித்து விளக்கப்பட்டது. எப்.பி.எஸ்.ஐ., செயலாளர் ஷோபனா பட்டாட், பொருளாளர் தேவிகா குணஷீலா, உறுப்பினர் பிரியா செல்வராஜ், மதுரை சங்கத்தலைவர் மகாலட்சுமி, செயலாளர் பத்மா சீனிவாசன், இந்திய மருத்துவ கழக மதுரை மீனாட்சி கிளைத்தலைவர் செந்தில்குமார், செயலாளர் ஆனந்த செல்வகுமார் பங்கேற்றனர்.

