ADDED : மார் 27, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: 'மதுரையில் காஸ் சிலிண்டர் எண்ணுடன் வாடிக்கையாளர்களின் கைரேகை பதிவை மார்ச் 31க்குள் இணைக்க வேண்டும்' என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.,) உத்தரவிட்டுள்ளது.
காஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் வாடிக்கையாளர் எண்ணுடன் அவர்களின் ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி மதுரையில் பல்வேறு ஏஜன்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கைரேகை பதிவு செய்யாமல் உள்ளனர்.
அந்த வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட ஏஜன்சி அலுவலகங்களுக்கு சென்று மார்ச் 31க்குள் கைரேகை பதிவு செய்ய வேண்டும். சனி, ஞாயிறும் பதிவு செய்யும் பணிகள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

