
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: தென்பரங்குன்றத்தில் சுப்புராஜ் என்பவரின் மரக் கடை உள்ளது. நேற்று அதிகாலை 5:00 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் திருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதிகளவில் தீப்பற்றி எரிந்ததால் மதுரை நகர், அனுப்பானடி தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு தீயை போராடி அணைத்தனர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.