ADDED : ஆக 28, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : தீபாவளி பண்டிகை தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் கோருபவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இதற்கான வழிமுறைகள் அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது கடையின் வரைபடம், கிரைய ஆவணம், உரிம கட்டணம் ரூ.500 அரசு கணக்கில் செலுத்திய ரசீது, முகவரி சான்று (ஆதார், பான், ரேஷன் கார்டு ஏதேனும் ஒன்று), உள்ளாட்சி ரசீது, பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் விண்ணப்பிக்க வேண்டும். செப்.,30க்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.