ADDED : ஏப் 15, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ஆண்டுதோறும் ஏப்.,14 தீயணைப்பு தியாகிகள் தினமாக, பணியின்போது வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
1944 ஏப்.,14ல் மும்பை துறைமுகத்தில் 'எஸ்.எஸ். போர்ட் ஸ்டிக்கிங்ஸ்' என்ற கப்பல் தீ விபத்திற்குள்ளானது.
இக்கப்பலில் 1200 டன் வெடிப்பொருட்கள், எண்ணெய் இருந்தன.
வெடிப்பொருட்கள் வெடித்ததில் 66 தீயணைப்பு வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்கள் நினைவாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மதுரை தல்லாகுளம் தீயணைப்பு அலுவலக வளாகத்தில் தமிழகத்தில் வீரமரணடைந்த 33 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் தென்மண்டல துணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட அதிகாரி வெங்கட்ரமணன், உதவி அதிகாரி திருமுருகன், நிலைய அலுவலர்கள் கந்தசாமி, அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

