ADDED : மே 10, 2024 05:05 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் உசிலை கால்பந்தாட்ட குழு சார்பில் மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டிகள் நடந்தன.
மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், துாத்துக்குடி பகுதிகளில் இருந்து 80 அணிகளைச் சேர்ந்த கால்பந்தாட்ட குழுவினர் பங்கேற்றனர். 10, 12, 14, 15 வயது பிரிவுகளில் லீக், நாக்அவுட் முறையில் போட்டிகளில் இறுதிப் போட்டிகளை எம்.எல்.ஏ., அய்யப்பன் துவக்கி வைத்தார்.
10 வயது பிரிவில் மதுரை ஏரன் 'ஏ' அணி முதலிடம், தேனி பெனடிக்ட் அணி 2ம் இடம், 12 வயது பிரிவில் திண்டுக்கல் கேலோ இந்தியா முதலிடம், மதுரை திருநகர் அக்னி கால்பந்தாட்ட குழு 2ம் இடம் பெற்றனர். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நகரி கல்வி குழுமம் அணி முதலிடம், உசிலை கால்பந்தாட்ட குழு 'பி' அணியினர் 2ம் இடம் பெற்றனர்.
15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் துாத்துக்குடி செயின்ட் மைக்கேல் அணி முதலிடம், உசிலை கால்பந்தாட்ட குழு 'பி' அணியினர் 2ம் இடம் பெற்றனர்.
வெற்றி பெற்ற அணியினருக்கும், சிறந்த வீரர்களுக்கும் எம்.எல்.ஏ., அய்யப்பன் பரிசு வழங்கினார். மாவட்ட கால்பந்தாட்ட குழு துணை செயலாளர் ரமேஷ், தேசிய நடுவர் நாகூர்கனி, உசிலை கால்பந்தாட்ட கழக தலைவர் வினோதன், செயலாளர் சுபாஷ், பொருளாளர் மணிகண்டன், பயிற்சியாளர்கள் பிரனாய்ட், சாம்கனி, ஒருங்கிணைப்பாளர் செந்தில்கண்ணன், உடற்கல்வி ஆசிரியர்கள் அகஸ்தியர், சிவக்குமார், யுவராஜா, செந்தில்குமார் ஆகியோர் போட்டிகளை நடத்தினர்.