ADDED : ஜூலை 06, 2024 06:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியமாக ரூ.6750 அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒன்றியச் செயலாளர் செல்வராணி தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் கலைச்செல்வி, மாநில பொதுச்செயலாளர் நுார்ஜஹான் பங்கேற்றனர். செல்லம்பட்டி ஒன்றிய அலுவலகம் முன் ஒன்றியச் செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.