/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீருக்கு ஒதுக்கிய பணம் போதாது முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு
/
குடிநீருக்கு ஒதுக்கிய பணம் போதாது முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு
குடிநீருக்கு ஒதுக்கிய பணம் போதாது முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு
குடிநீருக்கு ஒதுக்கிய பணம் போதாது முன்னாள் அமைச்சர் உதயகுமார் குற்றச்சாட்டு
ADDED : மே 09, 2024 05:37 AM
திருமங்கலம்: ''22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க அரசு ஒதுக்கிய ரூ. 300 கோடியை வைத்து வறட்சியை சமாளிக்க முடியாது'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
அவர் கூறியதாவது: மழைக் காலங்களில் தண்ணீரை சேமிக்க நீர் மேலாண்மையில் கோட்டை விட்டதால், தற்போது மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த அரசு. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. பெய்த மழைநீரை சேமிக்காததால் நிலத்தடி நீர் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
அரியலுார், கோவை, திண்டுக்கல், தஞ்சாவூர், விருதுநகர் உட்பட பல மாவட்டங்களில் வறட்சியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களுக்கு உள்ளாட்சி துறையில் ரூ. 150 கோடி, குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 75 கோடி, பேரூராட்சிக்கு ரூ. 75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிக மக்கள் தொகை உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க இத்தொகை போதுமானதாக இருக்காது. தண்ணீர் தட்டுப்பாடால் வாடும் மக்களின் கண்ணீரை துடைப்பதற்கு பதில் இது கண்துடைப்பு நடவடிக்கையாக உள்ளது.
முன்பு 'நீட்' தேர்வை ரத்து செய்யும் ரகசியம் உள்ளது. ஆளும் அரசுக்கு வெட்கம் உள்ளதா, மானம் உள்ளதா எனக் கேட்டார் உதயநிதி. தற்போது வரை நீட் தேர்வை ரத்து செய்யவில்லை. இப்போது அவர்களுக்கு அவை உள்ளதா என மக்கள் கேட்கின்றனர் என்றார்.