/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது
/
மதுரையில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் கைது
ADDED : ஏப் 25, 2024 04:05 AM

திருமங்கலம், : மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் கே.சென்னம்பட்டியில் கோழி கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் ஆலையை மூடக்கோரி மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் உட்பட 218 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் கே.சென்னம்பட்டியில் உள்ள இந்த ஆலையில் மருத்துவ கழிவுகளும் கையாளப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுச்சூழல் மாசும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கே.சென்னம்பட்டி, உன்னிபட்டி, ஆவல்சூரன்பட்டி, மேலப்பட்டி, குராயூர், பேய்குளம் கிராம மக்கள் லோக்சபா தேர்தலில் ஓட்டளிக்க ஆர்வம் காட்டவில்லை.
இந்நிலையில் நேற்று ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கள்ளிக்குடியில் கிராம மக்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் மறியலில் ஈடுபட்டனர். 25 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது. 98 பெண்கள் உள்ளிட்ட 218 பேரை கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

