/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்க்கரை ஆலையை திறப்பது எப்போது முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி
/
சர்க்கரை ஆலையை திறப்பது எப்போது முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி
சர்க்கரை ஆலையை திறப்பது எப்போது முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி
சர்க்கரை ஆலையை திறப்பது எப்போது முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி
ADDED : செப் 01, 2024 03:25 AM
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கவன ஈர்ப்பு கடிதத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமாரிடம் கோரிக்கை மனுவாக அளித்தனர். ஆலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
உதயகுமார் கூறியதாவது: இப்பகுதி மக்களின் வரப்பிரசாதமாக உள்ள சர்க்கரை ஆலையை திறக்க தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. 2011ம் ஆண்டு வருவாய் ஈட்டும் வகையில் ரூ.110 கோடியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கொண்டு வந்தோம். 85 சதவீதம் பணிகள் முடிந்த பின் கொரோனா காலத்தில் தடை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த திட்டத்தை கிடப்பில் போட்டனர்.
தமிழக அரசு விவசாயிகளை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. இந்த ஆலையை நம்பி 50 ஆயிரம் கரும்பு விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆலையை திறக்க வேண்டும். இதுகுறித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஆலையை திறக்க ரூ.23 கோடி வழங்கப்பட்டது. தற்போது ரூ.27 கோடி ஒதுக்கீடு செய்தால் சர்க்கரை ஆலையை திறக்கலாம் என்று அரசு அமைத்த கமிட்டி கூறுகிறது.
ஆனால் இங்கு இருக்கும் தொழிலாளர்கள் ரூ.11 கோடி இருந்தால் போதும். உடனடியாக ஆலையை தொடங்கலாம் என்று கூறுகிறார்கள். ஆலையை திறக்க முதல்வர் அக்கறை செலுத்தவில்லை.
எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தேர்தல் பிரசாரத்தில் சர்க்கரை ஆலையை சீரமைத்து உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
இன்றுவரை ஆலையை திறக்காமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார் என்றார்.