/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட போலீசுக்கு சுதந்திரம் அவசியம்
/
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட போலீசுக்கு சுதந்திரம் அவசியம்
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட போலீசுக்கு சுதந்திரம் அவசியம்
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட போலீசுக்கு சுதந்திரம் அவசியம்
ADDED : ஜூலை 15, 2024 05:47 AM
திருமங்கலம், : 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீசாருக்கு சுதந்திரம் அவசியம்' என, முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசினார்.
தி.மு.க., ஆட்சியில் நடந்த போதைப்பொருள் கடத்தல், கள்ளச்சாராயம் மரணம் குறித்து திருமங்கலம் கப்பலுாரில் அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார்.
கண்ணன், பிரபுசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், மாணிக்கம், நீதிபதி, ஜெ., பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் கலந்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு என எந்தப் பிரச்னை என்றாலும் முதலமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார். தற்பொழுது அதானியுடன் ரகசியம் ஒப்பந்தம் போட்டு ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கள்ளக்குறிச்சியில் 65 பேர் பலியானதற்கு தி.மு.க., ஆட்சியின் அலட்சிய போக்கே காரணம்.
தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், கொலை, கொள்ளை என செய்திகள் வராத நாளே இல்லை. ஆனால் வி.ஐ.பி., தரவரிசை போல 4000 ரவுடிகளை ஏ,பி,சி, என்று தரம் பிரித்து பட்டியல் வெளியிடுகிறார்கள். போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யாமல் சுதந்திரமாக செயல்பட விட்டால்தான் சட்டம் ஒழுங்கை சீரமைக்க முடியும்.
மதுரையில் நகைக்காக மூன்று மூதாட்டிகள் படுகொலை செய்யப்பட்டும், இதுவரை துப்பு துலங்க வில்லை. தமிழகத்திற்கு ஒரு டி.எம்.சி., தண்ணீர் கூட தர மறுக்கும் கர்நாடகா முதலமைச்சரை, தமிழக முதலமைச்சர் கண்டிக்காமல் மவுனம் விரதம் இருக்கிறார் என்றார்.

