/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இயற்கை பாதுகாப்பு குறித்த கற்பித்தல் வேண்டும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
/
இயற்கை பாதுகாப்பு குறித்த கற்பித்தல் வேண்டும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
இயற்கை பாதுகாப்பு குறித்த கற்பித்தல் வேண்டும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
இயற்கை பாதுகாப்பு குறித்த கற்பித்தல் வேண்டும் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தல்
ADDED : ஏப் 08, 2024 04:31 AM

மதுரை : கல்வி நிறுவனங்கள் இயற்கை பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு அதிகம் கற்பிக்க வேண்டும் என முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
மதுரை தியாகராஜர் கல்லுாரி பவளவிழா நிகழ்ச்சி தலைவர் உமா கண்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் ஹரி தியாகராஜன் வரவேற்றார். வெங்கையா நாயுடு பேசியதாவது:
கல்வி நிறுவனங்கள் ஒழுக்கம், கூடுதல் திறமைகளை கற்றுக்கொடுத்தால் தான் மாணவர் எதிர்கால வாழ்வியலுக்கு உதவும். கல்வி நிறுவனங்களில் இளைஞர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் இல்லை. இதற்காக தான் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதை புரிந்து கல்வி நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.
ஒழுக்கம், அர்ப்பணிப்பு, கடவுள் நம்பிக்கை மூன்றும் வாழ்வை மேம்படுத்தும். இளைஞர்கள் வளம் அதிகம் கொண்டுள்ள நாம் இவற்றை பின்பற்ற வேண்டும். உலகில் 3வது பொருளாதார நாடாக நாம் உருவெடுக்கவுள்ளோம். இயற்கை மாற்றத்தை சமாளிப்பது உலகளவில் சவாலாக உள்ளது.
இயற்கையை பாதுகாக்கும் கல்வி மிக அவசியம். நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்காத விளைவு தான் பெங்களூருவில் தண்ணீர் பிரச்னைக்கு காரணம். கேரளா, தெலுங்கானாவிலும் சில இடங்களில் இப்பிரச்னை எழுந்துள்ளது.
மனம், உடலை வளமாக்கும் யோகாவிற்கு பிரதமர் மோடி அளித்த முக்கியத்துவம் காரணமாக பல நாடுகளில் பிரபலமாகியுள்ளது. ஆரோக்கியமான இயற்கை கலாசாரம் எதிர்காலத்திற்கு நல்லது. குழந்தைகள் துரித உணவுகளுக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும்.
கூட்டுக் குடும்பம் முறை விழிப்புணர்வு வேண்டும். டிவிக்கும், இணையதளங்களுக்கும் இளைஞர்கள் அடிமையாவதை தடுக்க வேண்டும். சேவை மனப்பான்மையுடன் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும். அவ்வகையில் இக்கல்லுாரி பாராட்டுக்குரியது என்றார்.
ரயாலா கார்ப்பரேஷன் தலைவர் ரஞ்சித் பிரதீப், கல்லுாரி முதல்வர் பாண்டியராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சியை வெங்கையா நாயுடு பார்வையிட்டார். சிறந்த தொழில்முனைவோர்கள், முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

