/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது மோசடி வழக்கு
/
சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது மோசடி வழக்கு
ADDED : ஜூலை 15, 2024 06:28 AM
மதுரை : மதுரையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரை கோச்சடையைச் சேர்ந்தவர் அமுதா. இவரது தந்தை இறப்புக்கு பின் அவர் வசித்த வீட்டை தொழில் அபிவிருத்திக்காக அடமானம் வைக்க அமுதாவின் சகோதரர் சந்தோஷ்குமார் முயற்சித்தார். வீட்டை தனக்கு தானசெட்டில்மென்ட் எழுதி கொடுக்குமாறு சகோதரி அமுதா, தாயார் சீனியம்மாளிடம் கேட்க அவர்கள் மறுத்தனர்.
இதனால் நண்பர்களுடன் சேர்ந்து போலி ஆவணம் தயாரித்து தனக்கு தானசெட்டில்மென்ட் கொடுத்ததாக பத்திரப்பதிவு செய்தார். அந்த பத்திரத்தை வைத்து தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.20 லட்சம் கடன் பெற்றார். கடனை திருப்பி செலுத்தாத நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி வீட்டை ஜப்தி செய்ய வந்தபோதுதான் சந்தோஷ்குமார் மோசடியில் ஈடுபட்டது அமுதாவுக்கும், சீனியம்மாளுக்கும் தெரிந்தது. இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
சந்தோஷ்குமார், நண்பர்கள் கோபால், ஹரிஹரன், பத்திர எழுத்தர் இதயசந்திரன், சார் பதிவாளர் மணிவாசகம் உட்பட 7 பேர் மீது மோசடி உட்பட 7 பிரிவுகளின் கீழ் எஸ்.ஐ., சந்தானபோஸ் வழக்குப்பதிவு செய்தார்.

