ADDED : ஜூன் 06, 2026 09:22 PM
அ நிறம் | அளவு
மதுரை: மேலுார் பாரதியார்புரம் கஸ்துாரிபா மாணவிகள் விடுதியை தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம் பராமரிக்கிறது.
இங்கு இலவசமாக தங்கி பயில விரும்பும் மேலுார் பகுதி மாணவிகள் நேரடியாக படிவம் பெற்று விண்ணப்பிக்கலாம். இதில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவிகள் தங்கி படிக்கலாம். 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையான மாணவிகள் சேர்த்துக்கொள்ளப்படுவர். விவரங்களுக்கு 93447 52688ல் தொடர்புகொள்ளலாம் என இயக்குநர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
