/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செஸ் பயிற்சி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செஸ் பயிற்சி
ADDED : ஜூலை 07, 2024 02:20 AM
மதுரை: மதுரை கலைஞர் நுாற்றாண்டு நுாலகத்தில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச செஸ் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.
முதன்மை நுாலகர் தினேஷ் குமார் தலைமை வகித்தார். நுாலகர் சந்தான கிருஷ்ணன் வரவேற்றார். தேசிய செஸ் நடுவர் பாண்டியராஜன் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளித்தார்.
அவர் கூறியதாவது:
26 ஆண்டுகளாக மாவட்ட, தேசிய அளவில் போட்டிகள் நடத்தி வருகிறோம். செஸ்சையும், படிப்பையும் பிரிக்க முடியாது.
இரண்டுக்கும் மன ஒருமைப்பாடு அவசியம். இங்கு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு செஸ் அடிப்படை கற்றுத்தரப்படுகிறது.
25 பேர் பங்கேற்றனர்.ஆரம்ப கட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க சவாலாக இருந்தாலும் அவர்களுடைய ஆர்வம் வியக்க வைத்தது. இவர்களுக்கு என பிரத்யேகமாக போர்டு உள்ளது. அவர்கள்போட்டிகளில் பங்குபெற 6 மாதம் பயிற்சி போதும்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.
நுாலகர் சிவசூர்யா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகள் பிரிவு நுாலகர் முருகன், வாசகர் ஸ்ரீகாந்த் செய்தனர்.