/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இலவச கம்ப்யூட்டர் டெலிகாலிங் பயிற்சி
/
இலவச கம்ப்யூட்டர் டெலிகாலிங் பயிற்சி
ADDED : செப் 11, 2024 06:20 AM
மதுரை : மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் மற்றும் டெலிகாலிங் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிளஸ் தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண்கள் பங்கேற்கலாம். காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை நான்கு மாத கால பயிற்சி காலத்தில் இலவச சீருடை, உபகரணங்கள் வழங்கப்படும்.
ஆங்கில பேச்சுப் பயிற்சியுடன் கம்ப்யூட்டர் எம்.எஸ்.ஆபீஸ், சிஸ்டம் டிரபுள் ஷூட், போட்டோஷாப், கோரல் டிரா பயிற்சி அளிக்கப்படும். ஐ.டி.,நிறுவனங்கள், பிற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படும்.
சுயதொழில் செய்ய விரும்பினால் மானியத்துடன் வங்கிக்கடன் பெற வழிகாட்டப்படும்.
பயிற்சிக்கு 86100 12770 ல் தொடர்பு கொள்ளலாம்.

