நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. செயலாளர் பாலாஜி தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் கர்ணன், தங்கராஜ், ஒன்றிய நிர்வாகிகள் தெய்வேந்திரன், கோபால் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் செயலாளர் மாரியப்பன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் துவக்கி வைத்தார்.
கோவை சங்கரா கண் மருத்துவமனை டாக்டர் ஹர்ஷிதா தலைமையில் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். 50 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். ஏற்பாடுகளை காக்கும் கரங்கள் நற்பணி மன்றத் தலைவர் சிவா, செயலாளர் கண்ணன் செய்திருந்தனர்.