ADDED : மே 11, 2024 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம், மெட்ராஸ் ரோட்டரி சங்கம் இணைந்து பார்வையிழந்தோரின் 4 குடும்பங்களுக்கு ரூ.22.50 லட்சம் மதிப்புள்ள
இலவச வீடுகளை வழங்கின. மாவட்ட ஆளுனர் (தேர்வு) கோவிந்தசாமி தலைமை வகித்தார்.
முன்னாள் ஆளுனர் ஸ்ரீதர், மெட்ராஸ் ரோட்டரி சங்கத் தலைவர் ரவி, முன்னாள் மாவட்ட தலைவர் கமலா ஆகியோர் வீடுகளை திறந்து வைத்தனர். சமுதாய தொண்டு இயக்குனர் அனுராதா உட்பட பலர் பேசினர்.
மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கத் தலைவர் வாசுதேவன் வரவேற்றார். திட்ட தொடர்பாளர் சேதுமாதவா திட்டத்தின் சிறப்புகளை எடுத்து கூறினார். ராமமூர்த்தி நன்றி கூறினார்.
இந்த அமைப்பினர் ஏற்கனவே 45 வீடுகள் பார்வையற்றோருக்கு வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.