/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாற்று திறனாளிகளுக்கு இலவச அலைபேசி
/
மாற்று திறனாளிகளுக்கு இலவச அலைபேசி
ADDED : ஆக 23, 2024 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச அலைபேசி வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் 120 பேர் வரை விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் தகுதியானவர்களை பயிற்சி கலெக்டர் வைஷ்ணவி பால், துறை அலுவலர் சுவாமிநாதன், தொழில் வழிகாட்டும் அலுவலர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர்கள் தேர்வு செய்தனர்.
பார்வையற்ற, காது கேளாத மாணவர்கள், வேலைக்கு செல்வோர் மற்றும் இளையோர்களுக்கும் விரைவில் இலவச அலைபேசி வழங்கப்படுகிறது.

