ADDED : ஆக 16, 2024 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை பரவை மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் ஆக.29 முதல் 31 வரை 3 நாட்கள் 'இலவச செயற்கை மூட்டு பொருத்தும் சிறப்பு முகாம்' நடக்க உள்ளது.
இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை கை, செயற்கை கால், கிரட்சஸ், காலிபர்ஸ், வாக்கர் போன்றவை வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை. தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி: 88386 02295 என, கல்லுாரி முதல்வர் உமாபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

