ADDED : மே 02, 2024 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: திருவாதவூரில் பேஷ்கார் குருசாமி நினைவாக அவரது மகன் கேரளா ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜமாணிக்கம் நடத்தும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமில் 560 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி தலைவர் இளவரசன் தலைமை வகித்தார். ராஜமாணிக்கம் மனைவி திருவனந்தபுரம் டி.ஐ.ஜி., நிஷாந்தினி முன்னிலை வகித்தார். மே 31 வரை நடக்கும் முகாமில் சிலம்பம், தையல், இசை, நடனம், ஓவியம், தட்டச்சு உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இங்குள்ள அறிவகம் கல்வி மையத்தில் போட்டித்தேர்வுகளுக்கு வாரம் 2 நாட்கள் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் செல்வராஜ், பாலச்சந்திரன், ஐசக் தேவராஜ், சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

