ADDED : ஜூன் 07, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் அதிசய காமாட்சி ஆதி மகா வராஹி பீடம் மற்றும் அஷ்ட வராஹி பீடம் அறக்கட்டளை சார்பில் ஆன்மிக பாராயண பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது.
பயிற்சியில் லலிதா சகஸ்ர நாமாவளி பாராயணம், வராகி மாலை மற்றும் வராஹி அம்மன், முருகன் உள்பட அனைத்து ஹிந்து கடவுள்களில் பாடல்கள் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும். செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 6:00 முதல் காலை 7:00 மணி வரையிலும், சனிக்கிழமை இரவு 7:00 மணி, இரவு 8:30 மணி வரையும் வகுப்புகள் நடக்க உள்ளது. விரைவில் பயிற்சி வகுப்புகள் துவங்குகிறது. விருப்பமுள்ளோர் 9994141379ல் முன்பதிவு செய்யலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்
