UPDATED : ஜூன் 07, 2026 04:23 PM
ADDED : ஜூன் 07, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
திருநகர்: திருநகர் ஹாக்கி கிளப் சார்பில் உட்பிரிவு லீக் ஹாக்கி போட்டிகள் மூன்று நாட்கள் அண்ணா பூங்கா விளையாட்டு மைதானத்தில் நடந்தது.
திருநகர் டிபெண்டர்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றனர். திருநகர் ஹண்டர்ஸ் அணி இரண்டாமிடம், திருநகர் வாரியர்ஸ் அணி மூன்றாமிடம், திருநகர் டிராகன்ஸ் அணி நான்காமிடம், திருநகர் டக்லர்ஸ்அணி ஐந்தாமிடம் வென்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், கிறிஸ்தோபர் திலக் எம்.பி., மதுரை ஹாக்கி சங்க தலைவர் கண்ணன், திருநகர் ஹாக்கி கிளப் செயலாளர் ரமேஷ் பரிசுகள் வழங்கினர்.
