ADDED : செப் 05, 2024 04:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் ; குருவித்துறையில் மத்திய அரசின் நேஷனல் ஜூட் போர்டு மற்றும் பெட்கிராட் சார்பில் பெண்களுக்கு 3 மாத இலவச சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி துவங்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் ரம்யா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கிருஷ்ணன், செயலர் சின்னமாயன், வி.ஏ.ஓ., முபாரக் முன்னிலை வகித்தனர். பொருளாளர் சாராள் ரூபி வரவேற்றார். டாக்டர் பூபதி மாணிக்கம் துவக்கி வைத்தார். பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் பயனாளிகளுக்கு பயிற்சி உபகரணங்களை வழங்கினார்.
17 வகை சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிக்குப் பின் சுயதொழில் துவங்க மத்திய மாநில அரசின் மானியத்துடன் வங்கி கடன் பெற்று தருவது குறித்து ஆலோசனை வழங்கினார். தலைவர் கிருஷ்ணவேணி, பயிற்சியாளர்கள் கண்ணன், ரேவதி பங்கேற்றனர்.