ADDED : ஜூலை 15, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: ஆஸ்டின்பட்டி ரூட்செட் பயிற்சி நிலையத்தில் வீடியோகிராபி, போட்டோகிராபி தொழில் பயிற்சி முகாம் ஜூலை 20ல் துவங்கி 31 நாட்கள் நடக்க உள்ளது. தினமும் காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி நடைபெறும். உணவு, தங்குமிடம் இலவசம். 18 முதல் 50 வரை உள்ள இருபாலர், திருநங்கைகள் பங்கேற்கலாம். விருப்பம் உள்ளவர்கள் 96262 46671ல் அல்லது https://forms.gle/MXkyrDTg4ipKpotQ7 லிங்கில் ஜூலை 19க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஸ்மார்ட் கார்டு நகல், நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினருக்கும், ஊராட்சிகளில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.
