ADDED : ஜூலை 15, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியம் மருதங்குடியில் 100 நாள் வேலை திட்ட பணியில் 512 பேர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள பணித்தள பொறுப்பாளர்கள் தங்களுடைய உறவினர்களுக்கும், தனக்கு சாதகமானவர்களுக்கும் மட்டுமே பணி வழங்குகின்றனர். முதியோரை அவதுாறாக பேசுவதாகவும், ரூ.100 லஞ்சமாக வழங்குவோருக்கு மட்டுமே வேலை வழங்குகின்றனர் எனவும்கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று கள்ளிக்குடி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்ததால் கலைந்து சென்றனர்.
