ADDED : மார் 12, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் தீ அணைப்பு நிலைய வளாகத்திலுள்ள ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாம் மார்ச் 20ல் துவங்குகிறது.
காலை 9:30 முதல் மாலை 5:30 மணிவரை ஒருமாதம் நடக்கும் முகாமில் விருப்பமுள்ள, 18 முதல் 45 வயதுவரையான பெண்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். மார்ச் 19க்குள் 94456 00561ல் அல்லது mdu.rudset@gmail.com,
Website: www.rudsettrainning.orgல் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருவோர் ஆதார், ரேஷன் கார்டு,, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன் வர வேண்டும். 100 நாள் வேலை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என இயக்குனர் சுந்தராச்சாரி தெரிவித்தார்.