ADDED : ஜூன் 16, 2024 05:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: நாகப்பட்டினத்தில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலை வளாகத்தில் ஜூன் 19 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நன்னீர் மீன் வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டிய மீன் பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேளாண்மை அறிவியல் நிலையம் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. விவசாயிகள், பண்ணை மகளிர், இளைஞர்கள், தொழில் முனைவோர்கள் பயன்பெறலாம். முதலில் பதிவு செய்யும் 100 பேருக்கு அனுமதி. ஆர்வமுடையோர் 97875 86190, 98656 23423 ல் பதிவு செய்யலாம்.