/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பொதுமாறுதலில் அதிகரித்த 'புறக்கணிப்புகள்' விதி மாற்றத்தால் விரக்தியா
/
பொதுமாறுதலில் அதிகரித்த 'புறக்கணிப்புகள்' விதி மாற்றத்தால் விரக்தியா
பொதுமாறுதலில் அதிகரித்த 'புறக்கணிப்புகள்' விதி மாற்றத்தால் விரக்தியா
பொதுமாறுதலில் அதிகரித்த 'புறக்கணிப்புகள்' விதி மாற்றத்தால் விரக்தியா
ADDED : ஜூலை 05, 2024 05:07 AM
மதுரை: மதுரையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஏராளமான தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் இடங்களைத் தேர்வு செய்யாமல் புறக்கணித்தது (நாட் வில்லிங்) தெரியவந்துள்ளது.
ஜூலை 1 முதல் தொடக்க கல்வித்துறையில் பொதுமாறுதல் கலந்தாய்வு துவங்கியுள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு ஒன்றியத்துக்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள் என்ற பிரிவுகளில் இடமாறுதல் கலந்தாய்வு நடந்தன.
இதில் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் காண்பிக்கப்பட்டன. அதற்கேற்ப விண்ணப்பங்களும் பெறப்பட்டிருந்தன. ஆனால் கலந்தாய்வில் விண்ணப்பித்த பெரும்பாலானோர் வருகை தரவில்லை. அதேநேரம் பங்கேற்றவர்களும் 'விருப்பம் இல்லை' (நாட் வில்லிங்) என புறக்கணித்து விட்டனர்.
குறிப்பாக நேற்று மாவட்டத்திற்குள் 55 தொடக்க, 39 நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான இடங்கள் இருந்தபோதும் நடுநிலையில் 4 பேர் மட்டுமே இடமாறுதல் பெற்றனர். 11 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தொடக்க பள்ளி தலைமையாசிரியர் பணிமாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த ஒரு தலைமையாசிரியரும் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதுவரை நடந்த கலந்தாய்வுகளில் 40 சதவீதம் பேர் கூட கலந்தாய்வில் பயனடையவில்லை. புறக்கணிப்புகள் அதிகம் உள்ளன.
ஆசிரியர்கள் கூறியதாவது: தொடக்கக் கல்வி துவங்கியது முதல் இத்துறையில் கல்வி ஒன்றியத்திற்குள் மட்டுமே சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு, மாறுதல்கள் நடந்தன. இந்தாண்டு முதல் முறையாக மாநில சீனியாரிட்டி முறை (அரசாணை எண் 243) பின்பற்றப்பட்டது. இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். சங்கங்கள் போராட்டங்களை துவக்கியுள்ளன.
இதனால் மாறுதல் வேண்டாம் என தலைமையாசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் புறக்கணித்துள்ளது தெரியவந்துள்ளது. இது, மாவட்டங்களுக்கு இடையேயான கலந்தாய்வின்போது வெளி மாவட்டத்தினர் மதுரைக்குள் வருகை தருவது அதிகரிக்கும் என்றனர்.