ADDED : செப் 14, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் நேற்று ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி அன்று திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் 24 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது. அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலத்திற்காக நேற்று மாலை 16 கால் மண்டபம் கொண்டுவரப்பட்டது. அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், ஹிந்து மக்கள் கட்சி தென்மண்டல அமைப்பாளர் அன்பழகன் தலைமையில் அகில பாரத அனுமன் சேனா நிறுவன தலைவர் ஸ்ரீதர், தென்னிந்திய பார்வர்டு பிளாக் நிறுவன தலைவர் திருமாறன் பேசினர்.
பின்பு விநாயகர் சிலைகளுக்கு பூஜை, தீபாராதனை முடிந்து ரத வீதிகள், பெரிய ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செவ்வந்திகுளம் கண்மாயில் கரைக்கப்பட்டது.

