ADDED : ஏப் 11, 2024 05:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : ஹவுராவிலிருந்து கன்னியாகுமரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ரயில்வே எஸ். ஐ. தில்லை நடராஜன், ஏட்டு செண்பகசெல்வம், ஜெயச்சந்திரன், விஜயமுதன், செல்வராஜ், போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மாடசாமி ஆகியோர் அந்த ரயிலில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக பைகளை வைத்து கொண்டிருந்த நபரிடம் விசாரணை செய்தனர்.
அவர், உசிலம்பட்டியைச் சேர்ந்த சுப்பு 70 என்பதும், விசாகப்பட்டினத்திலிருந்து மதுரைக்கு கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடமிருந்து 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர். இதன் மதிப்பு ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம்.

