/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மலைபோல் குவியும் குப்பை; புகைமண்டலமாக ரிங்ரோடு
/
மலைபோல் குவியும் குப்பை; புகைமண்டலமாக ரிங்ரோடு
ADDED : ஏப் 26, 2024 12:40 AM

கருப்பாயூரணி : மதுரை ரிங்ரோடு பகுதியில் குப்பையை கொட்டிச் செல்வதால் அவை மலைபோல் குவிந்துள்ளன. அதனை எரிப்பதால் ரோடு முழுவதும் புகைமண்டலமாக காட்சி அளிக்கிறது.
ரிங் ரோட்டில் பாண்டிக் கோயில், ஒத்தக்கடை, சிந்தாமணி பகுதியில் மருத்துவக் கழிவுகள், கோழிக் கழிவுகள், மார்க்கெட் கழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. அத்துடன் நகரின் பல பகுதிகளிலிருந்தும் குப்பையை ரோட்டின் இருபுறம் கொட்டிச் செல்கின்றனர். இதிலிருந்து பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள், இரும்பு போன்றவற்றை எடுத்துச் செல்ல வருவோர் இக்குப்பையை எரித்துவிட்டு செல்கின்றனர். ரோடு முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது.
வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ரிங்ரோடு விரிவாக்கப்பகுதியில் வசிப்போர் புகையால் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சியினர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

