நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில்ஓய்வு பெற்ற காவல்துறை அலுவலர்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. ஓய்வுபெற்ற கூடுதல் கண்காணிப்பாளர் போஸ் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற கூடுதல் கண்காணிப்பாளரும், சங்க பொதுச் செயலாளருமான குமரவேல் முன்னிலை வகித்தார்.
ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர்கள் சண்முகசாமி, சென்றாயப்பெருமாள், தங்கையா சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். பொருளாளர் ராஜா சந்திரசேகர் ஆண்டறிக்கை வாசித்தார். ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர்களின் நலம் தொடர்பான தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டது. ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர் முருகேசன், சென்றாயப்பெருமாள் நன்கொடை வழங்கினர்.

