ADDED : ஆக 19, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: பேரையூர் பகுதியில் இயற்கை உரம் மூலம் நிலங்களை வளப்படுத்த விவசாயிகள் ஆட்டுக்கிடை அமைத்து வருகின்றனர்.
பேரையூர் பகுதிகளில் மானாவாரி பயிராக மக்காச்சோளம், பருத்தி, சிறுதானியங்கள் சாகுபடி நடக்கிறது.
தற்போது நிலத்தை உழவு செய்து விதைப்புக்கு தயார் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் நிலத்தை இயற்கை உரத்தால் வளப்படுத்தும் வகையில், ஆட்டுக் கிடை அமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அப்பகுதியில் மேய்ச்சலுக்காக வரும் ஆடுகளை தங்களது நிலத்தில் கிடை அமைத்து தங்கும்படி கூறுகின்றனர். அதன்மூலம் கிடைக்கும் ஆட்டுச் சாணம், சிறுநீரை நிலத்திற்கு இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர். இதற்காக கூடுதல் பணம் செலவு செய்வதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

