/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முடங்கிய செஞ்சிலுவை சங்கம் கலெக்டருக்கு கவர்னர் உத்தரவு
/
முடங்கிய செஞ்சிலுவை சங்கம் கலெக்டருக்கு கவர்னர் உத்தரவு
முடங்கிய செஞ்சிலுவை சங்கம் கலெக்டருக்கு கவர்னர் உத்தரவு
முடங்கிய செஞ்சிலுவை சங்கம் கலெக்டருக்கு கவர்னர் உத்தரவு
ADDED : மார் 13, 2025 05:12 AM
மதுரை: நான்கு ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் மதுரை செஞ்சிலுவை சங்கப் பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கவர்னர் ஆர்.என்.ரவி கலெக்டர் சங்கீதாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இச்சங்கம் கலெக்டர் தலைமையில் இயங்குகிறது. கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் இச்சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். 1677 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நிர்வாக குழுவுக்கு 11 பேர் தேர்வு செய்யப்படுவர். சேர்மன், துணை சேர்மன், செயலாளரை கலெக்டர் தேர்வு செய்வார்.
4 ஆண்டுகளுக்கு முன் தேர்தல் நடந்தபோது உறுப்பினர் அல்லாதோரும் பங்கேற்றதாகக் கூறி அன்றைய கலெக்டர் அனீஷ்சேகர் தேர்தலை ரத்து செய்து, சங்க செயல்பாடுகளை முடக்கினார். அதன்பின் செயலாளர் ராஜ்குமார் என்பவர் மட்டும் சங்கம் சார்பில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். சங்க உறுப்பினர் சீனிவாசன் கவர்னர் ரவிக்கு அனுப்பிய மனுவில், ''சங்கத்தில் வெளியாட்கள் ஊடுருவியதாலேயே ஆண்டுக்கணக்கில் சங்கம் செயல்படாமல் உள்ளது. 4 ஆண்டுகளாக சங்கம் செயல்படாததால் விபத்து மற்றும் பேரிடர் நிவாரண பணிகள், சுற்றுச்சூழல், சுகாதார பணிகள் முடங்கியுள்ளன. அதன் சேவை உரியவர்களுக்கு கிடைக்காமல் போவதால் செஞ்சிலுவை சங்கம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என மனு அனுப்பி இருந்தார். இதையடுத்து கவர்னர் அலுவலகத்தில் இருந்து மதுரை செஞ்சிலுவை சங்கம் செயல்பட உரிய நடவடிக்கையை எடுக்குமாறு, கலெக்டருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.