ADDED : மே 05, 2024 03:29 AM
திருப்பரங்குன்றம், : தமிழ்நாடு மொழி சிறுபான்மை சவுராஷ்டிரா கூட்டமைப்பு, சவுராஷ்டிரா கல்லுாரி கவுன்சில், பரமக்குடி அறிவு வளர்ச்சி மையம் சார்பில் அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் கல்லுாரியில் நடந்தது.
கூட்டமைப்புத் தலைவர் அனந்தராமன் தலைமை வகித்தார். தொழிலதிபர் ஞானபிரபாகரன் துவக்கி வைத்தார். கல்லுாரி செயலாளர் குமரேஷ் அறிமுக உரையாற்றினார்.
நிர்வாகக் குழு உறுப்பினர் ராமசுப்பிரமணியன் வரவேற்றார். பொருளாளர் பாஸ்கர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பன்சிதர், வெங்கடேஷ்வரன் பேசினர்.
பரமக்குடி அறிவு வளர்ச்சி மையம் தலைவர் பாலமுருகன், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது குறித்து விளக்கினார். புலவர் பரசுராம் தொகுத்துரைத்தார்.
கூட்டமைப்பு இணைச் செயலாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார். கல்லுாரி முதல்வர் சீனிவாசன், முன்னாள் முதல்வர் ராமலிங்கம், அறிவு வளர்ச்சி மையம்மூலம் தேர்வானவர்கள், பயிற்சி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.