/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு 'நீட்' பயிற்சி மையங்கள் துவக்கம்
/
அரசு 'நீட்' பயிற்சி மையங்கள் துவக்கம்
ADDED : மார் 28, 2024 06:33 AM
மதுரை: மதுரையில் பிளஸ் 2 முடித்த அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கும் மையங்கள் நேற்று துவங்கின.
மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 485 மாணவர்கள் இத்தேர்வுக்காக பதிவு செய்தனர். அவர்களுக்கு இருப்பிட வசதிக்கு ஏற்ப எம்.சி., பள்ளி, ஒத்தக்கடை அரசு பெண்கள் பள்ளி, திருமங்கலம் பி.கே.என்., பெண்கள் பள்ளியில் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. எம்.சி., பள்ளியில் சி.இ.ஓ., கார்த்திகா துவக்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வெண்ணிலாதேவி, தலைமை ஆசிரியர் ரவி, ஆசிரியர்கள் ஞானகுரு, ஜெசிந்தா உள்பட பலர் பங்கேற்றனர். திருமங்கலம் மையத்தில் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கந்தசாமி துவக்கி வைத்தார். மூன்று மையங்களிலும் பாடம்வாரியாக 150 ஆசிரியர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

