
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் 47வது பட்டமளிப்பு விழா நடந்தது.
செயலாளர் சுவாமி வேதானந்த துவக்கி வைத்தார். முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக துணைவேந்தர் பஞ்சநாதம் 311 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
கல்லுாரி குலபதி சுவாமி அத்யாத்மானந்த, துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர், அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.