ADDED : ஏப் 03, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார் : உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி மாணவர்கள் 'கிராம தங்கல்' திட்டத்தில் அலங்காநல்லுார் ஒன்றியத்தில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகின்றனர்.
விவசாயிகளை சந்தித்து இயற்கை விவசாயம், செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கின்றனர். மாணவர்கள் சசிதரன், ஜெயமூர்த்தி, சாய் சம்பத், ஹேமந்த் அர்ஜுன், யுவபாரதி, அம்ருத்ராஜ், ஷ்யாம் கணேஷ் ஆகியோர் தேவசேரியில் உள்ள விவசாயி கண்ணன் தோட்டத்தில் கொய்யா மரங்களில் பதியம் செய்ய பயிற்சி அளித்து, அதன் நன்மைகளை விளக்கினர்.

